ரீ-ரிலீஸ் செய்யப்படும் கில்லி - துணிவு.. ப்ரீ புக்கிங்கில் செய்த வசூல்..
Ajith Kumar
Vijay
Thunivu
Box office
Ghilli
By Kathick
ரிலீஸ் படங்களுக்கு சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், நாளை விஜய்யின் கில்லி மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களையும் ரீ-ரிலீஸ் செய்கின்றனர்.
விஜய்யின் கில்லி படம் கடந்த 2024ஆம் ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் வருகின்ற 20ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்கின்றனர். மேலும், அஜித்தின் துணிவு படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில், ரீ-ரிலீஸ் ஆகவுள்ள கில்லி மற்றும் துணிவு ஆகிய படங்களின் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது.
இதில், இதுவரை நடைபெற்ற ப்ரீ புக்கிங்கில் கில்லி ரூ. 35 லட்சமும், துணிவு ரூ. 12 லட்சமும் வசூலித்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் முதல் நாள் வசூல் எவ்வளவு வரப்போகிறது என்று.