இதுதான் நீங்க சொன்ன சிங்கப்பெண்ணா.. ரயிலில் நடைமேடை சாகசம் செய்த ப்ள்ளி சிறுமியின் வீடியோ..

Tamil nadu Viral Video
By Edward Aug 18, 2022 09:20 AM GMT
Report

பெரும்பாலும் கல்லுரி மாணவர்களை விட பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அட்டூழி செயல்கள் தான் தற்போதைய காலக்கட்டத்தில் அதிகளவில் பெருகி வருகிறது.

எதாவது ஒரு பிரச்சனை என்றால் தூக்கு மாட்டிக்கொள்வது, பால்டாயில் குடிப்பது என்று தற்கொலை செய்யும் செய்திகளாகவே சமீபத்தில் வெளியாகி வருகிறது. அதே நேரத்தில் மாணவர்கள் போடும் சண்டை பொது இடத்தில் நடந்து கொள்ளும் விதம் எல்லாம் முகம் சுளிக்க வைத்து வருகிறது.

மாணவர்கள் தான் அப்படி என்றால் அம்பத்தூர் வழியாக செல்லும் மின்சார ரயிலில் பள்ளி சிறுமி, ரயிலில் புஃட்போர்ட் அடித்தவாறு நடைமேடையில் காலை வைத்து சறுக்கிய படி சாகசம் செய்துள்ளார் ஒரு மாணவி.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இதுக்கு தான் பள்ளிக்கு அனுப்புகிறார்களா என்று கருத்துக்களை தெரிவித்ததோடு வருங்கால சிங்கப்பெண்ணே என்றும் கேலி செய்து வருகிறார்கள்.