வடமாநில சிறுமிகளை கொடுமைப்படுத்திய நடிகை மும்தாஜ்! காதல் வலையில் சிக்கிய இளம் பெண்..

Mumtaz Bigg Boss Indian Actress
By Edward May 12, 2022 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கத்தில் மோனிஷா என் மோனலிசா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியார் நடிகை மும்தாஸ். இப்படத்திற்கு பிறகு ரோஜா கூட்டம், ஸ்டார், குத்து போன்ற படங்களில் நடித்தும் வந்தார்.

இதையடுத்து ஒருசில தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்களில் நடித்து வந்தார். அதன்பின் போதிய வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போனார். பின் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்ட மும்தாஸ் அதிலும் நல்ல வரவேற்பு பெறாமல் கைவிடப்பட்டார்.

தற்போது சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேலும் வட மாநிலத்தை சேர்ந்த 19 வயது மற்றும் அவரது தங்கை 17 வயது சிறுமிகள் மும்தாஜ் வீட்டில் வேலைக்காக 6 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளனர்.

தன்னை கொடுமைப்படுத்துவதாக 19 வயது இளம் பெண் 100க்கு கால் செய்து புகாரளித்துள்ளார். வீட்டிற்கு வந்த போலிசார் சிறுமிகளை மீட்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

ஆனால் 19 வயது மேஜரான பெண் சில நாட்களாக அங்குள்ள ஒரு பையனை காதலித்து வருவதாகவும் அதை மும்தாஜ் தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தான் அந்த இளம் பெண் போலிசில் புகாரளித்துள்ளாராம். இதுதொடர்பாக சிறுமிகளை எப்படி வேலைக்கு அமர்தலாம் என்ற நோக்கில் விசாரணை நடந்து வருகிறது.