செல்வராகவனுக்கும் 2ஆம் மனைவி கீதாஞ்சலிக்கும் விவாகரத்தா? வெடித்த புது சர்ச்சை..
செல்வராகவன்
இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தற்போது 7ஜி ரெயின்போ காலனி 2, ஜிவி பிராகாஷை வைத்து மென்ட்டல் மனதில் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார்.
சாணிக்காயிதம், பீஸ்ட், பகாசூரன், உள்ளிட்ட பல படங்களை அடுத்து தற்போது ஆர்யன் உள்ளிட்ட படங்களில் நடித்தும் வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் ஏதாவது ஒரு பதிவினை பகிர்ந்து வருவார்.

சமீபத்தில், இன்னும் 6 மாசத்துல நடக்கப்போற பயங்கரம், அது வரும், எப்படி இத்தனை முறை உன்னாள் எழுந்து நிற்க முடிகிறது என்றும் கிட்டத்தட்ட எனக்கு கல்லறை கட்டி பூசி எல்லாம் வைத்துவிட்டார்கள்.
அதில் இருந்து ஒருவாரம் முன் தான் வெளியே வந்தேன். அது என்ன விஷயம் என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து, செல்வராகவனுக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி பேசுகிறார் என்ற கேள்வியும் எழுந்து வந்தது.
விவாகரத்தா
இந்நிலையில் அவர்களை பற்றிய புதிய சர்ச்சை கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. செல்வராகவன் - கீதாஞ்சலி ஜோடிக்கு திருமணமாகி 14 ஆண்டுகளாகும் நிலையில், தற்போது இருவரும் விவாகத்து செய்யவுள்ளார்கள் என்ற தகவல் பரவி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கீதாஞ்சலி
அதற்கு காரணம் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து செல்வராகவனின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியிருக்கிறார். இதனால் தான் இவர்கள் இருவரும் பிரியவுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே பேட்டியில் செல்வராகவன் பேசியதை வைத்து இந்த விவாகரத்து செய்தி கிளம்பியிருக்கிறது. இதுகுறித்து செல்வராகவன் - கீதாஞ்சலி விளக்கம் அளித்தால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.