Goat: விஜய்க்கு ஜோடியாக நடிக்கு நடிகை மீனாட்சி செளத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது அவரது 68வது படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். பெரும்பாலும் விஜய் படம் என்றாலே அப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பெரியளவில் பேசப்படுவார்கள்.
அப்படி படத்தில் கமிட்டாகியது முதல் தற்போது வரை ரசிகர்களால் கவர்ந்திழுத்து வருபவர் தான் தளபதி68 படத்தின் கதாநாயகி மீனாட்சி செளத்ரி. 2018 உலகளவில் நடைபெற்ற மிஸ் கிராண்ட் இண்டர்நேஷ்னல் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை பிடித்தார் மீனாட்சி.
அதன்பின் இந்தியில் அப்ஸ்டார்ட் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து Ichata Vahanamulu Niluparadu என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகினார். இதனை தொடர்ந்து சிங்கர்ப்பூர் சலூன், குண்டூர் காரம் போன்ற படங்களில் நடித்தும் கையில் அடுத்தடுத்த படங்களை வைத்திருக்கும் மீனாட்சி, விஜய்யின் கோட் (The Greatest of All Time) படத்தில் நடித்தும் வருகிறார்.
லக்கி பாஸ்கர், மட்கா, விஸ்வரம்பரா போன்ற படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மீனாட்சி செளத்ரி ரசிகர்களை மயக்கும் வண்ணம் சிகப்பு நிற ஆடையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.




