கோலாகலமாக நடந்து முடிந்த GOAT பட நடிகையின் திருமணம்.. அழகிய வீடியோ இதோ
பார்வதி நாயர்
மாடலிங் துறையில் களமிறங்கி சினிமாவிற்குள் நுழைந்து பிரபலமடைந்த நாயகிகளில் ஒருவர் நடிகை பார்வதி நாயர். ஏராளமான அழகி போட்டிகளிலும் கலந்துகொண்ட பார்வதி நாயர் நேவி குயின் அழகி போட்டியின் டைட்டில் வின்னராக தேர்வானவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் படங்கள் நடித்து வந்தவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது அஜித்தின் என்னை அறிந்தால் படம்.
இந்த படம் மட்டுமின்றி தமிழில் பார்வதி, உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய்யின் கோட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
புகைப்படங்கள்
கடந்த வாரம் பார்வதி நாயருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டுள்ளார்.