அஜித்தின் மாபெரும் வசூல் சாதனை.. குட் பேட் அக்லி இதுவரை செய்துள்ள வசூல்
அஜித்தின் GBU
தமிழ் திரையுலகில் ரசிகர்களால் தல மேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் ஹீரோக்களில் ஒருவர் அஜித். இவர் நடிப்பில் எந்த திரைப்படம் வெளிவந்தாலும், அப்படம் வசூலில் பட்டையை கிளப்பும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்துள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியர் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றியடைந்துள்ள இப்படம் 12 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் 12 நாட்களில் ரூ. 244 கோடி வசூல் செய்துள்ளது. இது அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வசூல் சாதனையாகும் என கூறப்படுகிறது.