உலகளவில் வசூலை வாரிக்குவிக்கும் அஜித்தின் குட் பேட் அக்லி.. இதுவரை இத்தனை கோடியா
Ajith Kumar
Trisha
Adhik Ravichandran
Box office
Good Bad Ugly
By Karthick Raja
கடந்த வாரம் வெளிவந்து வசூல் வேட்டையாடி வருகிறது அஜித் குட் பேட் அக்லி திரைப்படம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர்.
மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். த்ரிஷா இப்படத்தில் கதாநாயகியாக அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்திருந்தார்.

மேலும் சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், 4 நாட்களை கடந்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் ரூ. 155 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் சாதனை தொடரும் என கூறப்படுகிறது.