குட் பேட் அக்லி படத்தின் மொத்த வசூல் விவரம்.. பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறிய தகவல்
Ajith Kumar
Box office
Good Bad Ugly
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி.
இப்படம் உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்ததாக தகவல் வெளிவந்தது.
இந்த நிலையில், பிரபல மூத்த சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி, குட் பேட் அக்லி படத்தின் வசூல் விவரம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதன்படி, குட் பேட் அக்லி படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 320 கோடி. இப்படத்தின் திரையரங்க உரிமை, OTT, சாட்டிலைட் உள்ளிட்ட ப்ரீ பிசினஸ் அனைத்தும் சேர்த்தால், இப்படம் ரூ. 254 கோடி ரிலீஸுக்கு முன்பே வசூல் செய்துள்ளது. ரிலீஸுக்கு பின் இப்படம் உலகளவில் ரூ. 212 கோடி வசூல் செய்துள்ளது என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.