அஜித்தின் குட் பேட் அக்லி இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா..

Ajith Kumar Box office Good Bad Ugly
By Kathick Apr 20, 2025 03:25 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித்தின் குட் பேட் அக்லி படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. அஜித்தின் தீவிர ரசிகரும் பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இதற்கு முன் மார்க் ஆண்டனி எனும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து இப்படமும் இவருக்கு வெற்றி படமாகவே அமைந்துள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா நடித்துள்ளார்.

அஜித்தின் குட் பேட் அக்லி இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா.. | Good Bad Ugly Movie Box Office Worldwide

மேலும் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திரையரங்கில் வெற்றிநடை போட்டு வரும் குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதை பற்றி பார்க்கலாம் வாங்க. வெளிவந்த தகவலின்படி, இப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 228 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.