நடு விரலை காட்டிய அஜித், இப்போ எங்க போச்சு உங்க கொள்கை

Ajith Kumar Actors Tamil Actors Adhik Ravichandran
By Dhiviyarajan May 20, 2024 03:51 AM GMT
Report

அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர். இவர் நடிப்பில் சில மாதங்களாக விடா முயற்சி படம் பிரமாண்டமாக நடந்து வந்தது. ஆனால், என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, படத்திம் ஷுட்டிங் அப்படியே நிற்கிறது.

இந்நிலையில் அஜித் இனி இது வேலைக்கு ஆகாது என, ஆதிக் இயக்கத்தில் குட் பேட் அக்லீ படத்தில் நடிக்க சென்று விட்டார். அப்படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது.

தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவர, ரசிகர்கள் அதை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அந்த பர்ஸ்ட் லுக்கில் அஜித் நடு விரலை காட்டுவது போல் இருக்க, பலரும் அஜித் இப்போ உங்க கொள்கை எங்க் போச்சு என்று கோபமாக கேள்வி கேட்டு வருகின்றனர்.

ஏனெனில் அஜித் இளைஞர்களை கெடுக்கும்படி இனி சிகரெட் கூட பிடிக்க மாட்டேன் படத்தில் என்று கூறியிருந்தார், ஆனால், தற்போது இப்படி ஒரு பர்ஸ்ட் லுக் எல்லோருக்கும் ஷாக் தான்..

நடு விரலை காட்டிய அஜித், இப்போ எங்க போச்சு உங்க கொள்கை | Good Bad Ugly Movie Poster Controversy