இந்த விசயத்தில் நயன்தாரா, சமந்தாவையே ஓரங்கட்டிய காஜல் அகர்வால்.. லேடி சூப்பர் ஸ்டார் இடம் இவருக்கு தான்...

Nayanthara Samantha Google Indian Actress Katrina Kaif
By Edward Nov 09, 2022 06:18 PM GMT
Report

இந்திய சினிமாவில் நடிகர்களை தாண்டி அதிகளவில் பேசப்படுபவர்கள் நடிகைகள் தான். முன்னணி நடிகையாகவும் டாப் நடிகையாகவும் திகழ பல நடிகைகள் போட்டிப்போட்டு படத்தில் நடிக்க ஆசைப்படுவார்கள். அப்படி இந்திய நடிகைகள் இந்தியளவில் ரசிகர்களால் தேடப்படுபவர்களின் லிஸ்ட்டை கூகுள் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது.

சமீபகாலமாக தென்னிந்திய நடிகைகள் பலர் பல ஊடகம் வெளியிட்ட பட்டியல்களின் டாப் இடத்தினை பிடித்திருக்கிறது. அதில் சமந்தா, நயன் தாராவும் டாப் 5 இடத்தினை பிடித்து வந்தனர். ஆனால் தற்போது கூகுள் வெளியிட்டுள்ள பட்டியளில் தென்னிந்திய நடிகைகளை பின்னுக்கு தள்ளி 3 இடங்களை பாலிவுட் நடிகைகள் கைப்பற்றி இருக்கிறார்கள். அவர்கள் பட்டியல் பின்வருமாறு...

கூகுள் டாப் 10

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட கத்ரீனா கைஃப் தான் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளின் முதல் இடத்தினை பிடித்திருக்கிறார்.

அவரை தொடர்ந்து ஆர் ஆர் ஆர், ஷம்ஷெரா, பிரம்மாஸ்திரம், கங்குபாய் காட்யாவாடி உள்ளிட்ட படங்களில் நடித்தும், ரன்பீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின் கர்ப்பமாக இருப்பதால் நடிகை ஆலியாபட் இரண்டாம் இடத்தினையும் பிடித்திருக்கிறார்.

உலகம் முழுவதும் பிரபலமான ஹாலிவுட் வரை சென்று கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளார்.

இவர்களை அடுத்து தென்னிந்திய நடிகையாக காஜல் அகர்வால் 4 ஆம் இடத்தினையும், நடிகை சமந்தா 5வது இடத்தினையும் பிடித்திருக்கிறார்கள். '

மேலும் நேஷ்னல் கிரஷ் என்று ரசிகர்களால் கூறப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா சற்று இறங்கி 6வது இடத்தினை பிடித்திருக்கிறார். விஜய்யின் வாரிசு படத்தின் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் ஒன்றால் இந்த இடத்தினை பிடிக்க காரணமாம்.

7வது இடத்தினை நடிகை ஐஸ்வர்யா ராய், 8ஆம் இடத்தினை பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை தீபிகா படுகோனேவும்,

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன் தாரா 9வது இடத்தினையும், பாலிவுட் வரை சென்றுள்ள நடிஅகி தமன்னா 10 ஆம் இடத்தினையும் பிடித்திருக்கிறார்கள்.