ரஜினி அத பண்ணட்டும்.. நான் ஹீரோவா நடிக்கிறேன்.. தயாரிப்பாளரை அலறவிட்ட கவுண்டமணி
நகைச்சுவையில் கிங் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் கவுண்டமணி, Thug Life செய்த தகவலை பிரபல இயக்குனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். நடிகர் கவுண்டமணி 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' என்ற திரைப்படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 2 லட்சம் சம்பளம் என மொத்தமாக 40 நாட்கள் நடித்துள்ளார்.
அந்த சமயத்தில் ஏவிஎம் தயாரிப்பில் உருவாகவுள்ள எஜமான் திரைப்படத்தில் காமெடியாக நடிக்க கவுண்டமணியை கேட்டுள்ளனர். 15 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்றும் அதற்கு சம்பளம் ரூ. 15 லட்சம் என ஏவிஎம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
ஆனால், எனக்கு ரூ. 50 லட்சம் சம்பளம் வேண்டும் என கவுண்டமணி கூறியுள்ளார். இதற்கு ஏவிஎம் ஷாக்காகியுள்ளனர். 15 நாட்களுக்கு ரூ. 50 லட்சமா என அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார்களாம்.
சரி நான் ரூ. 15 லட்சம் சம்பளம் வாங்கி கொண்டு எஜமான் படத்தில் நடிக்க தயார். ஆனால், ஹீரோவாக நான் நடிக்கிறேன், ரஜினிகாந்தை எனக்கு காமெடியாக நடிக்க சொல்லுங்க என கூறி Thug Life போட்டுள்ளார் கவுண்டமணி. இந்த தகவலை பிரபல இயக்குனர் வி. சேகர் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.