என்னது தடுப்பூசி போடலையா! சம்பளம் கிடையாது ஓடிடு! ஷாக் கொடுத்த பிரதமரால் புலம்பும் மக்கள்..
கொரோனா வைரஸின் தாக்கம் 2019 டிசம்பர் மாதம் ஆரம்பித்து பல கோடி மக்களை கவு வாங்கி பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வருகிறது. இன்னும் சில நாடுகளில் பாதிப்பு குறையாமல் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.
அதற்காக லாக்டவுன் போடப்பட்டு பலவற்றிக்கு தடையும் அளிக்கப்பட்டுள்ளது. அதை தடுக்க தடுப்பூசிகள் மக்களுக்கு விரைவில் போடப்பட்டு பாதிப்பை கட்டுப்படுத்தி வருகிறார்கள் இந்நிலையில் தடுப்பூசி போடாமல் வேலைக்கு சென்றால் சம்பளம் கிடையாது என்று ஒரு நாட்டின் பிரதமர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது வேறு யாருமில்லை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தான்.
இதுகுறித்து அவர் கூறியது, கனடாவில் வேலையும் அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி போடாப்படாமல் இருப்பவர்களை சம்பளமில்லாத விடுப்பில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் விமானம், ரெயில், கப்பல் போன்றவற்றைவைகளில் பயணிப்பவர்கள் தடுப்பூசி போட்ட சான்றிதழை காண்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
கனடாவில் 12 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.