பிக்பாஸ்-ஐ விட்டு வெளியேறினதும் பிள்ளைகளுக்காக ஜிபி முத்து செய்த செயல்.. வைரலாகும் வீடியோ.
21 போட்டியாளர்கள்
பிரபல தொலைக்காட்சி சேனலான் ஸ்டார் விஜய்யின் 5 ஆண்டுகளாக கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். 5 சீசன் மற்றும் அல்டிமேட் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் 6 வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.
21 போட்டியாளர்கள் வீட்டில் அனுப்பட்ட நிலையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார் யூடியூபர் ஜிபி முத்து.
தன்னுடைய எதார்த்தமான பேச்சு குழந்தை குணத்தை வைத்து அனைவரிம் அன்பையும் பெற்று வந்த ஜிபி முத்து கடந்த சனிக்கிழமை வீட்டைவிட்டு தானாகவே வெளியேறி இருந்தார்.
ஜிபி முத்து
தன் மகன் விஷ்ணு உள்ளிட்ட பிள்ளைகளை பார்க்க கண்ணீருடன் வெளியேறினார்.
இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற ஜிபி முத்து போன முதல் நாளில் குழந்தைகளுக்கு பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ள வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
மேலும் தீபாவளி அன்று பூஜை செய்து குடும்பத்துடன் கொண்டாடி வீடியோவையும் பகிரிந்துள்ளார். இதற்கு பலர் வாழ்த்துக்களை ஆசிர்வாதத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.