புஷ்பா 2 1000 கோடி வசூல்..அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கொடுங்க!! பாலிவுட் நடிகை...
புஷ்பா 2 1000 கோடி
பான் இந்தியன் படமாக உருவாகி திரையரங்கில் பல படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய சம்பவங்களை செய்து வருகிறது. அந்தவகையில் பாகுபலி, ஆர் ஆர் ஆர், கேஜிஎஃப் 2, ஜவான், பதான், கல்கி 2898ஏடி உள்ளிட்ட படங்கள் 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது.
இதனை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் சமீபத்தில் நடித்து வெளியான புஷ்பா 2 படம் ரிலீஸாகிய 6 நாட்களில் கிட்டத்தட்ட 1000 கோடி வசூலை எட்டியிருக்கிறது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கங்கம்மா போர்ஷனை மட்டுமே தியேட்டரில் பார்த்த பலரும் சாமி வந்து ஆட்டம் போட்டு வருகிறார்கள்.
ஊர்வசி ரவுத்தெலா
இந்நிலையில் புஷ்பா 2 படத்தை பார்த்த பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தெலா, அவரது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
அதில் இரண்டாவது முறையாக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும், படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் புஷ்பா 3ல் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஊர்வசி ஆட்டம் போட ஸ்கெச் போடுவதாக கூறி வருகிறார்கள்.