ஆதாம்மா.. கமலுக்கே இந்த நிலைமையா! கதறவிட்ட பிக்பாஸ் ஜிபி முத்து
பிக்பாஸ் சீசன் 6 கடந்த வாரம் 9 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் கமல்ஹாசன் அவர்களால் துவங்கப்பட்டது. 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர். முதல்வாரமே போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதமும் சண்டையும் ஆரம்பித்தது.

ஜிபி முத்து
அதில் ஜிபி முத்துவும் சிக்கி இருந்தார். பிக்பாஸ் துவக்க விழாவில் முதல் ஆளாகச்சென்ற ஜிபி முத்து தனியாக இருப்பதால் கதறி புலம்பினார். இதற்கு ஆறுதல் படுத்த ஆதம் ஏவால் பற்றி கூறினார். அதற்கு ஜிபி முத்து ஆதம்மா... என்ற ரியாக்ஷன் கொடுத்து கமல் ஹாசனை கதறவிட்டு இருந்தார். தற்போது ஒரு வாரம் முடிவில் சனிக்கிழமை நிகழ்ச்சியில் கமல் ஹாசனின் பிரமோ வீடியோவை வெளியிட்டுள்ளது தொலைக்காட்சி.

ஆதம்மா எங்க இருக்காரு
முதல் மகேஷ்வரியை கலாய்த்து வந்த கமல் ஹாசன், ஜிபி முத்து கையில் வைத்திருந்த பாதமை காட்டியுள்ளார். அதற்கு கமல் பாதம் தெரியுது, ஆதம் தெரியலையா, ஆதம் எப்படி கோச்சிட்டாரு பாருங்க என்று கூறினார். அதற்கு ஜிபி முத்து, ஆதம்மா எங்க இருக்காரு என்ற ரியாக்ஷனை கொடுத்துள்ளார். இந்த பதிலை கேட்டு வாய்ப்பிளந்த படி கமல் ஹாசன் ஷாக்காகியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.