சூப்பர் ஸ்டார்-னா அது ரஜினி சார் தான்!! தளபதியை மறைமுகமாக தாக்கிய ஜிபி முத்து..

Rajinikanth Vijay Viral Video GP Muthu
By Edward Jul 26, 2023 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் ரிலீஸிற்காக காத்திருக்கிறார். அனிரூத் இசையில் காவாலா மற்றும் ஹுகும் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று இந்தியளவில் டிரெண்ட்டாகி வருகிறது.

இன்று இப்படத்தின் மூன்றாவது பாடல் ஜுஜுபி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக பல நடிகர்கள் போட்டிபோடுவதை வைத்து ஹுகும் பாடலில் பதிலடி கொடுத்திருப்பார் ரஜினிகாந்த்.

அதனை தொடர்ந்து அடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று ரசிகர்களும் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் யூடியூப் மூலம் பிரபலமாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் நல்ல வரவேற்பை பெற்ற ஜிபி முத்து சூப்பர் ஸ்டார் பற்றி சமீபத்தில் பேசியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார்னா அது என்னைக்கும் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான். மத்தபடி தல, இளையதளபதி வரலாம், யாரு வேணுலும் வரலாம் சூப்பர் ஸ்டாருக்கு ஒரே ஆள் அது ரஜினி சார் தான் என்று தெரிவித்துள்ளார்.