நடிகைகளுடன் நெருக்கமாக நடித்த ஜிவி பிரகாஷ்!! மனைவி சைந்தவி கண்டீசன் போட்டும் ஃபாலோ பண்ணலையாம்...

G V Prakash Kumar Gossip Today Tamil Actress Saindhavi
By Edward Jun 14, 2024 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக திகழ்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து பிரபலமானவர் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இசையை தாண்டி நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் ஜிவி பிரகாஷ், காதலித்து திருமணம் செய்த பாடகி சைந்தவியை பிரிந்து வாழ முடிவெடுத்திருந்தார்.

இருவரும் அதிகாரப்பூர்மாக பிரிந்து வாழப்போகிறோம் என்று கூறி அறிக்கையும் வெளியிட்டனர். இந்த செய்தி பலருக்கு பேசுபொருளாக மாறி, அவர்களை பற்றி பேச்சுக்கள் அதிகமாக இணையத்தில் பரவி வருகிறது.

நடிகைகளுடன் நெருக்கமாக நடித்த ஜிவி பிரகாஷ்!! மனைவி சைந்தவி கண்டீசன் போட்டும் ஃபாலோ பண்ணலையாம்... | Gv Prakash Accept Saindhavi Condition For Actress

இந்நிலையில், ஜிவி பிரகாஷின் பிறந்தநாளான ஜூன் 13 ஆம் தேதி பலர் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் ஜிவி பிரகாஷ் பேட்டியளித்து சில விஷயங்களை கூறியது தற்போது இணையத்தில் டிரெண்ட்டாகியுள்ளது.

100% Kadhal என்ற படத்தின் போது பேட்டியளித்திருக்கிறார். அந்த பேட்டியில், என்னோட முதல் காதல், சின்ன வயதில் கிரிக்கெட் மீது இருந்துள்ளது. அதன்பின் பியானெளவ் மீது இருந்தது. கிரிக்கெட்டிற்காக அடிவாங்கி இருக்கிறேன். ஞாயிற்று கிழமை காலையில் இருந்து இரவு வரை கிரவுண்ட்-க்கு சென்று விளையாடி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் நடிப்பில் சில காட்சிகளில் நடிப்பதை பார்த்து சைந்தவி கண்டீசன் போட்டார்களா? பொறாமைப்பட்டு இருக்கிறார்களா? என்று ஜிவி பிரகாஷிடம் கேட்டதற்கு, அதெல்லாம் என்று கூறியிருந்தார்.

நடிகைகளுடன் நெருக்கமாக நடித்த ஜிவி பிரகாஷ்!! மனைவி சைந்தவி கண்டீசன் போட்டும் ஃபாலோ பண்ணலையாம்... | Gv Prakash Accept Saindhavi Condition For Actress

ஆனால், இந்த கேள்வியை அதற்கு முன் முன்னாள் மனைவி சைந்தவியிடம் கேட்டதற்கு, நடிக்கப்போகிறார் என்று சொன்னதும் நிறைய கண்டீசன் போட்டேன், ஆனால் அதை அவர் ஃபாலோ பண்ணவில்லை என்று கூறியிருக்கிறார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.