தனுஷுக்கு துரோகம் செய்த அந்த 4 பேர்!! இவர்கள் தானா அது...
தனுஷுக்கு துரோகம்
நடிகரும் இயக்குநருமான தனுஷ், தற்போது இட்லி கடை படத்தினை இயக்கி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் நிலையில், சமீபத்தில் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.
அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள இட்லி கடை படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் ஜிவி பிரகாஷ் பேசிய விஷயம் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்த ராயன் படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பிரதர் கதாபாத்திரம் தனுஷுக்கு துரோகம் செய்யும். படத்தில் கூட என் நண்பனுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். அந்த 4 பேர் லிஸ்ட்டில் நான் சேர மாட்டேன் என்று கூறினார் ஜிவி.
அந்த 4 பேர்
அவர் கூறிய அந்த 4 பேர் யாரென்று தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் அந்த பேர் இவர்கள் தான் என்று அவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார்கள் தனுஷ் ரசிகர்கள்.
அதில் ஒருவர் தனுஷால் சினிமாவுக்கு வந்து பெரிய ஆளானவர் என்றும் மற்றொருவர் தனுஷால் பெயரும் புகழும் பெற்றவர் என்றும், மீதமுள்ள இரண்டு பேர்ரில் ஒருவர் தனுஷ் என் நண்பன் என்று சொன்னவர். எல்லாம் தனுஷுக்கு பழக்கமான ஆட்களாக இருக்கிறார்களே என்று பேசப்பட்டு வருகிறது.