மாதவன் படத்தால் சுதாவுக்கும் எனக்கும் சண்டை.. உண்மையை கூறிய ஜிவி பிரகாஷ்...
தமிழ் சினிமாவில் சிறுவயதில் பாடகராக அறிமுகமாகி தற்போது தமிழ் இசையமைப்பாளராக பல படைப்புகளை கொடுத்து வருகிறார் ஜிவி பிரகாஷ். ஏ ஆர் ரகுமான் அக்கா மகனாக ஜெண்டில்மேன் படத்தில் சிறு வயதில் ரகுமானால் அறிமுகப்படுத்தப்பட்டார்.
அதன்பின் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வந்தார். இசை, பாடகர் என்று இருந்த ஜிவி, பல படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். சமீபத்த்தில் சூரரை போற்று படத்திற்காக சிறந்த இசையமையமைப்பாளருக்கான தேசிய விருதினை பெற்றார்.
இந்நிலையில் அப்படத்தில் இயக்குனர் சுதா கொங்கராவுடன் ஏற்பட்ட சண்டை பற்றி விவரித்துள்ளார் ஜிவி. இருவருக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் அக்கா தம்பிக்குடையதாக இருந்தது. அப்படி இருந்ததால் அக்கா தம்பிக்கு இடையே பல சண்டைகள் வந்தது.
இதனால் பெரிய சண்டையால் இறுதி சுற்று படத்தினை நான் செய்யவில்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கும் என்பதால் நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அதன்பின் தான் சூரரை போற்று படத்தை சுதா கொடுத்தார் என்று கூறியுள்ளார்.