மனைவியை பிரிந்து வாழும் ஜிவி பிரகாஷ்.. விரைவில் விவகாரத்தா?..

G V Prakash Kumar Actors Tamil Actors
By Dhiviyarajan May 12, 2024 05:25 AM GMT
Report

குழந்தை பாடகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், இசையமைப்பாளராக வெயில் படத்தின் மூலம் அறிமுகமானார்.

கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த இவர், இப்போது பல படங்களில் நடித்து ஹீரோவாக நடித்து வருகிறார்.

கடந்த 2013 -ம் ஆண்டு ஜிவி.பிரகாஷ், பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

மனைவியை பிரிந்து வாழும் ஜிவி பிரகாஷ்.. விரைவில் விவகாரத்தா?.. | Gv Prakash Saindhavi Divorce Rumours

இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் சைந்தவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு , சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் விரைவில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க இருப்பதாகவும் தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை.