செய்தியாளரை படுகேவலமாக பேசிய எச் ராஜா.. பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட தகராறு..
எழுத்தாளர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் இரு பாகங்களாக படமாக எடுத்துள்ளார். முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்து கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
படம் வெளியாகி 11 நாட்கள் முடிவடைந்த நிலையில் பொன்னியின் செல்வன் உலகளவில் 400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதற்கிடையில் ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்றும் இந்து என்ற சமயம் அந்த காலக்கட்டத்தில் இல்லை என்றும் பல கலைஞர்கள் பேசி வருவது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
பொன்னியின் செல்வன்
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தினை பார்த்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார் பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா. படத்தை பற்றியும் அரசியல் சம்பந்தமாகவும் பேசிய எச் ராஜாவிடம், செய்தியாளர் ஒருவர், எங்கள் வீட்டில் வளர்த்த அல்சேஷன் நாய்க்கு வெறி பிடித்ததால் நாய் பிடிப்பவர் அதை அடித்தே கொன்றார் என்ற பதிவினை டிவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் போட்டீர்கள்.
இது தொடர்பாக விலங்குகள் நலவாரியம் விசாரணை நடத்தவுள்ள செய்தி வைரலாகியுள்ளது. இது நீங்கள் போடப்பட்ட பதிவா? இல்லை உங்கள் அட்மின் போட்ட டிவீட்டா என்று செய்தியாளர் கேட்டிருந்தார். இதற்கு எச் ராஜா அவர்கள் இப்படி நக்கலாக என்னிடம் கேள்விகள் கேட்கக்கூடாது என்றும் வெளியே போங்க என்று சொல்லிவிடுவேன், எந்த மீடியா நீங்கள் என்று மிரட்டும் பாணியில் கூறினார்.
அறிவாலயத்தில் அடிமை
மேலும், அப்படியொரு ஆணை எனக்கு வரவில்லை நீங்கள் காட்டுங்கள் என்றும் நீங்கள் ஃபிராடு, ஊடகத்தில் இருக்கிறவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் இல்லையா?.
நிறுத்துங்கள் என்று கத்தி பேசியும் ஊடகத்தினர் அறிவாலயத்தில் அடிமைகளாக இருக்கிறீர்கள் என்றும் அங்கிருந்து சென்றுள்ளார் எச் ராஜா. மேலும் அந்த செய்தியாளரை மட்டுமே ’யூ’ என்று கூறி பிராடு என்று கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.