விஜய் சாரோட பக்கா Farewell படம்.. ஜனநாயகன் இப்படித்தான் இருக்குமா? மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குநர் வினோத்
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியவர் ஹெச். வினோத். இதை தொடர்ந்து அஜித்துடன் கைகோர்த்த வினோத் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்தார்.
இதன்பின் தற்போது விஜய்யை வைத்து ஜனநாயகன் படத்தை இயக்கியுள்ளார். இது விஜய்யின் கடைசி படமாகும். அரசியலில் எண்ட்ரி கொடுத்துள்ள காரணத்தினால் சினிமாவில் இருந்து விலக விஜய் முடிவு செய்துள்ளார்.
விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் என்பதால் இப்படத்தை வருகிற 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இப்படம் குறித்து ஒரு சிறிய அப்டேட் வந்தாலே அதை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், இயக்குநர் ஹெச். வினோத் ஜனநாயகன் படம் குறித்து செம மாஸான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். சமீபத்தில் விழா மேடை ஒன்றில் பேசிய இயக்குநர் வினோத், "இது விஜய் சாரோட பக்கா Farewell படம். So, மாஸ், கமர்ஷியல் மற்றும் ஆக்ஷன் இந்த மூன்று விஷயங்களை எதிர்பார்த்து வாங்க. இது கம்ப்ளீட் மீல்ஸ்-ஆ இருக்கும்" என கூறியுள்ளார். இதன்மூலம் ஜனநாயகன் படம் தரமாக வந்திருக்கிறது என தெரிகிறது.