ஏன் விஜய்க்கு மட்டும் இப்படி நடக்குது.. லோகேஷ் கனகராஜால் புலம்பித்தள்ளும் ரசிகர்கள்..

Vijay Lokesh Kanagaraj Varisu
By Edward Aug 08, 2022 05:00 PM GMT
Report

பிஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தளபதி 66 படமான வாரிசு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இயக்குனர் வம்சி இயகத்தில் டில் ராஜ் தயாரிப்பில் விறுவிறுப்பாக ஷூட்டிங் சென்று கொண்டிருக்கிறது.

இப்படத்தினை அடுத்து தளபதி 67 படத்தின் வேலைகளை பார்க்க லோகேஷ் மும்முரமாக பணியாற்றி வருகிறார். இதற்கான அப்டேட்டினை விரையில் வெளியிடவுள்ளதாகவும் சில காலம் ஓய்வெடுத்து அதற்காக கதையை முடிக்கவுள்ளதாகவும் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் 67 படத்தில் வில்லியாக நடிகை சமந்தா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது. தற்போது சமந்தா உள்ளிட்ட 6 அல்லது 7 வில்லன்களை லோகேஷ் கனகராஜ் முடிவெடுத்திருப்பதாகவும் ப்ரித்விராஜ், சஞ்சய் தத் உள்ளிட்டவர்களின் பெயர்களும் அடிப்பட்டு வருகிறது.

இதனால் ஒரு வில்லனை வைத்த மாஸ்டர் படத்தில் கூட விஜய் சேதுபதி தான் ஹீரோவாக காட்டி இருந்தார் லோகேஷ். இதில் ஆறு வில்லன்களா என்று ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளார்களாம்.

கமலை வைத்து விக்ரம் படத்தில் எப்படியோ எடுத்து முடித்துவிட்டார். ஆனால் விஜய் அண்ணனுக்கு மட்டும் ஏன் லோகேஷ் இப்படி யோசிக்கிறார் என்று புலம்பி வருகிறார்களாம் விஜய் ரசிகர்கள்.