விவாகரத்து பெருகிறாரா ஹன்சிகா? ரெடியாகும் மற்றுமொரு கோலிவுட் ஜோடி!
ஹன்சிகா மோத்வானி
நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய இவர் 2007ம் ஆண்டு தெலுங்கில் Desamuduru படத்தின் மூலம் நாயகியாக களமிறங்கினார்.
அதன்பின் தெலுங்கு, ஹிந்தி கன்னடம் என படங்கள் நடித்தவர் 2011ம் ஆண்டு மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
சில வருடத்திற்கு முன்பு தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஹன்சிகா, சமீப காலமாக அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
விவாகரத்தா?
இந்நிலையில், ஹன்சிகா தனது அம்மா வீட்டில் வசித்து வருகிறாராம்.
தற்போது வெளியாகி உள்ள தகவல்படி நடிகை ஹன்சிகாவும், அவரது கணவர் சோஹைலும் விவாகரத்து தொடர்பாக கோர்ட்டுக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்களது விவாகரத்து செய்தி வெளிவர வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபடுகிறது.