திருமணத்திற்கு பின் ஹன்சிகாவின் குறையாத கிளாமர்.. டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் க்யூட் லுக்!!
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அதன்பின் தெலுங்கில் கதாநாயகியாக பிரபலமானார்.
பின் தமிழில் தனுஷ், விஜய், சூர்யா, ஆர்யா, விஷால், சிம்பு போன்ற நடிகர்களுடன் ஜோடியாக நடித்து டாப் நடிகையாக திகழ்ந்தார். நடிகர் சிம்புவை காதலித்து வந்த ஹன்சிகா, சில காரணங்களால் அவரைவிட்டு பிரிந்துவிட்டார்.
அதன்பின் நடிப்பில் கவனம் செலுத்தியும் உடல் எடையை குறைத்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வந்த ஹன்சிகா கடந்த ஆண்டு சோஹைல் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே ஹன்சிகாவின் தோழியை திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்றவருக்கு இரண்டாம் தாரமாக சென்றது அதிர்ச்சியை கொடுத்தது. அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
திருமணத்திற்கு முன் கிளாமரில் தாராளம் காட்டிய ஹன்சிகா அதன்பின்பும் கிளாமர் குறையாத போட்டோஷூட் எடுத்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். தற்போது வெள்ளைநிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.



