திருமணமாகியும் அதை நிறுத்தாத நடிகை ஹன்சிகா!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகா சிம்புவை காதலித்து பிரேக்கப்பும் செய்தார். அதன்பின் உடல் எடையை குறைத்து மஹா படத்தில் மீண்டும் சிம்புவுடன் ஜோடிப்போட்டு நடித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் ஹன்சிகா சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஹனிமூன் சென்று பிஸியாக இருந்த ஹன்சிகா, தன் திருமணத்தின் வீடியோவை ஹாட் ஸ்டாரில் சமீபத்தில் வெளியிட்டார்.
திருமணத்திற்கு பின் தன் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது என்றும் பல படங்களில் நடித்தும் வருகிறேன் என்றும் ஹன்சிகா கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகைகள் பெரும்பாலும் திருமணமாகினார் அடக்கவுடக்கமான பெண் போல மாற்றிக்கொள்வார்கள். ஆனால் அதை மாற்றிக்கொள்ளாத ஹன்சிகா கிளாமரில் உச்சக்கட்டம் காட்டி போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.