விவாகரத்தா? நடிகை ஹன்சிகா கொடுத்த ரியாக்ஷன்.. குழப்பத்தில் நெட்டிசன்கள்
ஹன்சிகா மோத்வானி
குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடிக்க தொடங்கி பின் தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஹன்சிகா தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதன்பின் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே என பல படங்களில் வரிசையாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
இவர் கடந்த 2022 டிசம்பரில் தனது காதலர் சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களாக ஹன்சிகா மற்றும் அவரது கணவர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையத்தில் செய்திகள் உலா வந்த வண்ணம் இருந்தது.
ஹன்சிகா ரியாக்ஷன்
இந்நிலையில் தனது வாழ்க்கை பற்றி வரும் செய்திகளை பார்த்து ஹன்சிகா சிரிப்பது போல ரியாக்ஷன் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோ வைரல் ஆகி மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் கணவரை பிரிந்த செய்தி உண்மையா இல்லையா என தற்போது நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.