ரூ. 4 கோடி லேண்ட் ரோவர் டிஃபெண்டர்!! முன்னாள் மனைவிக்கு பரிசாக கொடுத்த ஹர்திக் பாண்டியா..

Hardik Pandya Indian Cricket Team T20 World Cup 2026
By Edward Feb 22, 2026 07:30 AM GMT
Report

ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியா, தற்போது உலக கோப்பை டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய புதிய காதலியான மஹிகா சர்மாவுடன் நேரத்தை செலவிட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன் காதலி மஹிகாவின் பிறந்தநாளுக்கு அவருடன் நீச்சல் குளத்தில் ரொமான்ஸ் செய்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார் ஹர்திக்.

ரூ. 4 கோடி லேண்ட் ரோவர் டிஃபெண்டர்!! முன்னாள் மனைவிக்கு பரிசாக கொடுத்த ஹர்திக் பாண்டியா.. | Hardik Pandya Gifts 4 Crore Luxury Suv To Ex Wife

லேண்ட் ரோவர் டிஃபெண்டர்

இந்நிலையில் தான் காதலி திருமணம் செய்து கொண்ட நடாசாவை, ஒரு மகன் பிறந்து வளர்ந்தப்பின் சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்து பிரிந்தார். இருந்தாலும் மகனுக்காக ஹர்திக் - நடாசா இருபரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். தற்போது தன்னுடைய மகனின் எதிர்காலத்திற்கும் தன்னுடைய முன்னாள் மனைவிக்கும் சுமார் ரூ. 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் மதிப்பிலான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் என்ற சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

நடாசா மற்றும் மகன் அக்ஸ்தியா

சமீபத்தில் ஹர்திக் புக் செய்த காரை நடாசா மற்றும் அவரது மகன் பெற்றுக்கொண்ட புகைப்படத்தை கார் விற்பனை நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

ஏற்கனவே ஹர்திக் பாண்டியா டிஃபெண்டர் காரை பயன்படுத்தி வருகிறார். மறுபடியும் இந்த காரை வாங்குவதற்கு எங்கள் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளார். இது நம்பிக்கையின் அடிப்படையில் உருவான உறவு. அக்ஸ்தியா பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் ஆகியோரிடம் இந்த கார் மும்பையில் இப்படைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

இருவரும் பிரிந்தாலும் தன்னுடைய மகன் அஸ்தியாவுக்கு நல்ல பெற்றோர்களாக திகழ்ந்து வருவதை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

GalleryGallery