காதலியுடன் சேர்ந்து தேசியக் கொடியை அவமதித்த ஹர்திக் பாண்டியா!! காவல் நிலையத்தில் புகார்...
ஹர்திக் பாண்டியா
அகமதாபாத்தில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை நடந்து முடிந்தது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதி போட்டியில் இந்தியா வென்று வரலாற்று சாதனை படைத்தது.
வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய ஹர்திக் பாண்டியா, அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது தன்னுடைய காதலியுடன் என்ஜாய் செய்த வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கொண்டாட்டத்தின்போது ஹர்திக் பாண்டியா, தன்னுடைய காதலி மஹியேகா ஷர்மாவுடன் கோப்பையுடன் மைதானத்தை சுற்றி நடக்கும் காட்சியையும், கோப்பை பெறுவதற்காக போடப்பட்ட மேடையில் ஹர்த்திக்கும் மஹியேகாவும் படுத்துக்கொண்டு ரொமான்ஸ் செய்தபடி எடுத்த வீடியோவும் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.
காவல் நிலையத்தில் புகார்
இந்நிலையில் புனேவை சேர்ந்த வழக்கறிஞர் வாஜித் கான் என்பவர் சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், ஹர்திக் பாண்டியா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தேசியக்கொடியை அவமதித்து, தேசியக்கொடியின் கண்ணியத்தை காப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை என்பதை மறந்துவிட்டார். அதனால் ஹர்திக் பாண்டியாவின் இந்த செயல் சட்டப்படி குற்றமாகும் என்று கூறு வாஜித் கான் புகாரளித்திருக்கிறார்.

