ஹர்திக் பாண்டியாவின் ஒரே வாட்ச் இத்தனை கோடியா!! வாட்ச் கலெக்ஷன்...

Hardik Pandya Indian Cricket Team Smart Watch
By Edward Sep 11, 2025 04:30 AM GMT
Report

ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா தற்போது ஆசிய கோப்பை 2025 தொடரில் ஆடவிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க ஹர்திக் பாண்டியா, விலையுயர்ந்த ஆடம்பர கைக்கடிகாரங்களை வாங்கி வைப்பதில் ஆர்வம் கொண்டவர். அப்படி ஹர்திக் உலகில் அதிக விலையுயர்ந்த பிராண்ட் வாட்ச்களை வாங்கி வருகிறார்.

ஹர்திக் பாண்டியாவின் ஒரே வாட்ச் இத்தனை கோடியா!! வாட்ச் கலெக்ஷன்... | Hardik Pandya Richard Mille Rm 2704 Watch Price

ஆசிய கோப்பை 2025 போட்டிக்கான பயிற்சியின் போது அவர் கட்டியிருந்த ரிச்சர்ட் மில்லே RM 2704 பிராண்ட் வாட்ச்-ஐ அணிந்திருந்தார்.

வாட்ச் இத்தனை கோடி

இந்த வாட்ச் உலகம் முழுவதிலும் 50 வாட்ச்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. இது முதலில் ரஃபேல் நடாலுக்காக வடிவமைக்கப்பட்டது. இந்த வாட்ச் ரூ. 20 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்டியாவின் ஒரே வாட்ச் இத்தனை கோடியா!! வாட்ச் கலெக்ஷன்... | Hardik Pandya Richard Mille Rm 2704 Watch Price

இது ஆசியக்கோப்பை பரிசுத் தொகையைவிட 8 மடங்கு அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பாண்டியாவிடம் ஏற்கனவே RM 11 வெள்ளை செராமிக் வாட்ச் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 2.76 கோடியாம்.

இதை ஐபிஎல் போட்டியின்போது அவர் அணிந்திருந்தார். ரிச்சர்ட் மில்லே RM 67 - 02 எக்ஸ்ட்ரா தின் வாட்சும் உள்ளது. இது இத்தாலி பதிப்பு, இதன் விலை ரூ. 3.9 கோடி.