இந்துக்களே விழித்திருங்கள்!! திடீரென கொந்தளித்த நடிகை காஜல் அகர்வால்..
காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை காஜல் அகர்வால். 2020ல் கெளதம் கிச்சிலு என்பவரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால், இணையத்தில் ஒரு பதிவினை போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

அதில், தீ வைத்து எரிக்கப்பட்ட ஒரு மனிதனின் உடலை காட்டும் சுவரொட்டியை பகிர்ந்துள்ளார். அந்த சுவரில், வங்கதேச இந்துக்கள் மீது அனைவரின் பார்வையும் உள்ளது.
'இந்துக்களே விழித்தெழுங்கள், அமைதியாக இருப்பது உங்களை காப்பாற்றாது' என்று எழுதப்பட்டிருப்பதை காஜல் அகர்வால் பகிந்துள்ளார்.
சமீபகாலமாக வங்கதேசத்தில் நடக்கும் வன்முறையை இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனிஸால் தடுக்க முடியவில்லை. குறிப்பாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள், குறிவைத்து தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள்.
மைமன்சிங் பகுதியை சேர்ந்த இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் என்பவர் தீயிட்டு எரித்துக் கொள்ளப்பட்டார். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தான் காஜல் அகர்வால் இந்த பதிவினை பகிர்ந்திருக்கிறார்.