இந்தியா - பாகிஸ்தான் போட்டி!! எல்லார் கண்ணும் ஹர்திக் பாண்டியாவின் காதலி மீதுதான்..
இந்தியா - பாகிஸ்தான்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்ட்டராக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியா, சாப்பியன் டிராஃபி 2025 போட்டியில் கலந்து கொண்டு வருகிறார். நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுக்களை எடுத்தார்.
ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு மனைவி நடாசாவை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில் பிரிட்டீஷ் பாடகி ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது.
ஹர்திக் பாண்டியாவின் காதலி
பிரிட்டீஷ் பாடகியான ஜாஸ்மின் வாலியா என்பவருடன் ரகசியமாக காதலித்து வருவதாகவும் இருவரும் ஒரே ரெசாட்டில் இருந்தது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடந்த சாப்பியன் டிராஃபி போட்டி நடந்த மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவின் காதலி பங்கேற்றுள்ளார். அங்கு ஜாஸ்மின் வாலியா, ஃபிளையிங் கிஸ் கொடுப்பது போன்ற வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


