ஹர்திக் பாண்டியா ரொம்ப பாவம்!! புதிய காதலுடன் டேட்டிங் செய்கிறாரா மனைவி..
இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரராக இருப்பவர் தான் ஹர்டிக் பாண்டியா. இந்த நடப்பாண்டு இவருக்கு மிகவும் மோசமாக தான் இருக்கிறது. இவர் 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரை ஹர்திக் காயம் காரணமாக விலகினார்.
அதன் பின் குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இதனால் கடுப்பான ரோஹித் ஷர்மா ரசிகர்கள், ஹர்திக் பாண்டியாவை தீட்டி தீர்த்தனர். ஹர்திக் பாண்டியா செல்லும் இடம்தான் அவருக்கு எதிராக ரசிகர்கள் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் சொந்த வாழ்க்கையும் மிகப்பெரிய இடி ஒன்று விழுந்திருக்கிறது. ஹர்திக் பாண்டியா தனது காதல் மனைவியான நட்டாஷாவை விவாகரத்து செய்யவுள்ளதாகவும், 70% சொத்தை ஜீவனாம்சமாக அவருக்கும் கொடுப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளிவந்தது.
தற்போது ஹர்திக் பாண்டியாவின் மனைவியான நட்டாஷா அலெக்சாண்டர் என்பவருடன் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நட்டாஷா புதிய காதலனை பிடித்துவிட்டார் என்றும், இருவரும் டேட்டிங் செய்துகொண்டு இருக்கின்றனர் என்றும் சிலர் கூறி வருகின்றனர். ஆனால் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.