புதிய காதலியோடு ஜோடியாக பொது இடத்துக்கு சென்ற ஹர்திக் பாண்டியா!! யார் அந்த மஹிகா சர்மா..
ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியா தன்னுடைய புதிய காதலியுடன் காரில் இறங்கி செல்லும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு டிரெண்ட்டாகி வருகிறது.
ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார் ஹர்திக். அதன்பின் ஒருசில மாடல் நடிகையுடன் இணைத்து பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது பாலிவுட் சினிமாவில் நடித்து வரும் நடிகை மஹிகா சர்மாவுடன் ஹர்திக் பாண்டியா மும்பை விமான நிலையத்தில் வந்துள்ளார். இருவரும் ஒரே காரில் இறங்கியது முதல் ஜோடியாக கைக்கோர்த்தபடி சென்றுள்ளனர்.
யார் மஹிகா சர்மா
இதனையடுத்து யார் அந்த மஹிகா சர்மா என்று பலரும் தேட ஆரம்பித்துள்ளனர். ஒரு மாடலாக இருந்து தற்போது நடிகையாக திகழும் மஹிகா, மல்ஜோத்ரா, அனிதா, தருண் உள்ளிட்ட புகழ்மிக்க ஃபேஷன் டிசைனர்களுக்காக வாக் செய்துள்ளார்.
2024ல் இந்திய ஃபேஷன் விருதுகளில் அவருக்கு மாடல் ஆஃப் தி இயர் என்ற விருதும் பெற்றுள்ளார். பொருளாதாரம் மற்றும் நிதியியலில் பட்டம் பெற்றுள்ள மஹிகா சர்மா, சினிமா வாய்ப்பினையும் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

