தயாரிப்பாளர் தலையில் துண்டு.. பவன் கல்யாணின் ஹரி ஹர வீரமல்லு வரலாறு காணாது படுதோல்வி
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பவன் கல்யாண். இவர் நடித்த ஹரி ஹர வீரமல்லு படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. முதல் நாள் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அதே போல் வசூலும் மிகப்பெரிய அளவில் முதல் நாள் மட்டுமே வந்தது. இரண்டாவது நாளில் இருந்து ICU வார்டுக்கு சென்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆம், ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் வரலாறு காணாத மாபெரும் தோல்வியடைந்துள்ளது.
இப்படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு ரூ. 100 கோடி நஷ்டம் என தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் தயாரிப்பாளர் தலையில் துண்டு விழுந்துவிட்டது என திரை வட்டாரத்தில் பேசி கொள்கிறார்கள்.
அதே போல் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ரூ. 60 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி ஹீரோவாக தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட பவன் கல்யாணின் படத்திற்கே இப்படி ஒரு மோசமான நிலைமையா என கேள்வி எழுந்துள்ளது.