இவர் நடிச்சா யாரு பார்ப்பா!! லெஜண்ட் சரவணாவை அசிங்கப்படுத்திய ஹாரிஸ்? இதுதான் காரணம்..

Harris Jayaraj
By Edward Jun 01, 2022 02:30 PM GMT
Report

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் ஓனர் அருள் சரவணன் நடிப்பில் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜண்ட் படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் லான்ச் சமீபத்தில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு 10 நடிகைகளை வரவழைத்து கோடிக்கணக்கில் செலவு செய்து நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் சரவணன். அப்படி நிகழ்ச்சியில் பேட்டி கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ், இயக்குனர் முதலில் கதையை கூறும் போது எனக்கு பிடிக்கவில்லை.

பின் கதையை மாற்றிவிட்டு 6 மாதம் கழித்து என்னிடம் திரும்பவும் கதையை கூறினார்கள். நன்றாக இருக்கிறது என்று ஒப்புக்கொண்டு வேலையை ஆரம்பித்தேன். படம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகளாகிவிட்டது.

லெஜண்ட் சரவணன் எனக்கு 12 வருட நண்பர். ஹீரோவாக அவர் நடிக்கிறார் என்றதும் நான் அதிர்ச்சியாகி அவர் நடிச்சா யாரு பாப்பாங்கனு நினைச்சேன். ஆனால் படத்தில் அவரின் கடுமையான உழைப்பு கொடுத்துள்ளார். அதுதான் படத்தின் மிகப்பெரிய பலம் என்று கூறியுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.