ஆடிஷனில் நீயெல்லாம் ஒரு ஆளே இல்லனு அவமானப்படுத்தினாங்க!! ஹார்ட் பீட் பட நாயகிய..
பாடினி குமார்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நாயகி சீரியலில் அறிமுகமாகி ஹார்ட் பீட் வெப் தொடரில் டாக்டர் ரோலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை பாடினி குமார். டேக் டைவர்ஸ், சீசா, சரண்டர் என அடுத்தடுத்து நடித்து வந்த பாடினி, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கண் கலங்கியபடி பேசியுள்ளார்.

அதில் என் அப்பாவிற்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால் ஆர்மி வேலையை விட்டுவிட்டு நடிப்புக்காக அவரால் நேரத்தை செலவிடமுடியாமல் போனது என் அப்பாவை போல் எனக்கும் நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் என் அப்பாவிடம் சொன்னதும் அவர் எனக்கு ஆதரவாக இருந்தார்.
இதெல்லாம் ஒரு மூஞ்சியா
சினிமா வாய்ப்பு தேடி அலைந்த ஆரம்ப நாட்களை என்னை ரொம்பவே கூனிக்குறுக வைத்து, நீயெல்லாம் ஒரு ஆளே இல்லனு சொல்லி பயங்கரமா அவமானப்படுத்தினாங்க. அதை அவர்கள் தனியாக என்னிடம் சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை, சுற்றி இருந்த அனைவருக்கும் கேட்கும்படியா சொன்னாங்க. அவங்க என்னிடம் கண்டமேனிக்கு பேசியதை வெளியே நின்று கொண்டிருந்த என் அப்பா காதில் விழ, ரொம்பவே வேதனை அடைந்தார்.

இதெல்லாம் ஒரு மூஞ்சியா? உன்னை எல்லாம் சீரியஒல்ல கூட ஹீரோயினாக போடமாட்டாங்க, எந்த தைரியத்துல நீ ஹீரியினாக நடிக்க வந்த, கேமரா முனாடி நிற்கணும்னா அதுக்குன்னு ஒரு அழகு வேணும், தகுதி வேணும், அதெல்லாம் உன்கிட்ட எதுவும் இல்லன்னு கேட்டு என்னை அசிங்கப்படுத்தி அனுப்புனாங்க. அந்நேரத்தில் நான் ஒரு முடிவெடுத்து நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
நிறம், படிப்பு, அழகு இதையெல்லாம் வைத்து ஒருவரை மிகக் கேவலாமா அவமானப்படுத்துகிறார்கள், என்னைப்போல் சினிமா ஆசையில் நடிக்க வரும் வேறு எந்தப்பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது என்பதற்காக நான் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறேன் என்று பாடினி குமார் தெரிவித்துள்ளார்.