காதல் உறவில் துரோகம் ஏற்பட்டது..மனசு உடைந்துபோச்சு!! நடிகை ரெஜினா...

Regina Cassandra Relationship Tamil Actress Actress
By Jai Oct 31, 2026 06:37 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா. கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை, செக்ஷன் 108 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த ரெஜினா, தெலுங்கு, இந்தி மொழிப்படங்களிலும் நடித்து வந்தார். கடைசியாக விடாமுயற்சி படத்தில் வில்லியாக நடித்து அசத்திய ரெஜினா, சுந்தர் சி இயக்கத்தில் அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்துள்ளார்.

காதல் உறவில் துரோகம் ஏற்பட்டது..மனசு உடைந்துபோச்சு!! நடிகை ரெஜினா... | Heartbroken After Being Deceived In Love Regina

பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு வரும் ரெஜினா, தன் காதல் தோல்வி குறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.

அதில், தன்னுடைய காதல் 2020ல் முடிவுக்கு வந்தது. அந்த துயரத்திலிருந்து நான் மீண்டு வர, சொல்லொணா மனவேதனைக்கு உள்ளாகினேன். அந்த காதல் உறவில் நான் கடுமையாக ஏமாற்றப்படேன். அதனால் மனதளவில் முற்றிலும் உடைந்து போனேன்.

2020ல் என் காதல் உறவில் இந்த துரோகம் ஏற்பட்டபோது, இனிமேல் கொஞ்ச காலத்திற்கு இதுபோன்ற எந்த உறவிலும் ஈடுபடக்கூடாது என்று முடிவெடுத்தேன். என் நேரத்தையும் கவனத்தையும் எனக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்று நினைத்தேன். அந்நேரத்தில் தான் கொரோனா ஊரங்கும் தொடங்கியது. அதனால் முழு நேரத்தையும் எனக்காக செலவிட்டு சுய அன்பை கொடுத்துக் கொண்டேன். இன்று நான் இந்தத் தெளிவான இடத்திற்கு வந்திருப்பதற்கு அதுவே முக்கியக்காரணம்.

காதல் உறவில் துரோகம் ஏற்பட்டது..மனசு உடைந்துபோச்சு!! நடிகை ரெஜினா... | Heartbroken After Being Deceived In Love Regina

பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் தவறான முறையில் தொடப்படுவது, பாலியல் அத்துமீறல் போன்ற கொடூரங்கள் நடந்திருக்கிறது. தோழிகளிடம் பேசும்போது தான் நமக்கு புரிந்தது. இது அத்தனை பெண்களின் வாழ்க்கையிலும் நடந்த ஒரு கசப்பான உண்மை என்று. காதல் உறவுகளில் ஏமாற்றப்படுவது பெரும்பாலன பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான விஷயமாக இருக்கிறது. நமக்கு மட்டும்தான் இப்படி நடக்கிறதா? என்று நினைக்கூடாது.

காதல் உறவில் துரோகம் ஏற்பட்டது..மனசு உடைந்துபோச்சு!! நடிகை ரெஜினா... | Heartbroken After Being Deceived In Love Regina

பெண்கள் ஒன்றாக இணைந்து இதுபோன்ற அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எதையாவது இழக்கும்போது துக்கம் நிச்சயமாக இருக்கும். அழ வேண்டும் என்று தோன்றினால் மனதார அழுங்கள். காலையில் இருந்து இரவு வரை அழ வேண்டும் என்றாலும் அழுங்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன்? ஏன் இப்படி எதிர்வினையாற்றுகிறேன்? என்று நீங்களே கேள்வி கேட்டு சுய சந்தேகம் செய்து கொள்ளாதீர்கள்.

உங்களை நீங்களே குறைச் சொல்லிக் கொள்ளவேண்டாம். உங்கள் வாழ்க்கையில் ஒரு வலி நிறைந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் இருந்து வெளியே வரத் தேவையான அன்பையும் அக்கறையையும் முதலில் உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளுங்கள் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் ரெஜினா.