காதல் சர்ச்சையில் சிக்கியே தூக்கி எறியப்பட்ட அஜித்பட நடிகை! எந்த நடிகருடன் தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிரபலங்கள் சில படங்களில் நடித்து ஆள் அடையாளம் தெரியாமல் போகும் சூழலை ஏற்படுத்தும். அதில் நடிகைகள் பெரும்பாலானவர்கள் வெற்றிப்படங்களில் நடித்து சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகிவிடுவார்கள்.

அந்தவகையில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை ஹீரா. நடிகர் முரளியின் இதயம் படத்தில் நடிகையாக அறிமுகமாகி, திருடா திருடா, சதி லீலாவதி, காதல் கோட்டை, அவ்வை சண்முகி, தொடரும், சுயம்வரம் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

10 ஆண்டுகளே நீடித்த ஹீராவின் சினிமா வாழ்க்கை 1999தோடு முடிவுக்கு வந்தது. அதற்கு என்ன காரணம் என்று பலர் பல காரணங்கள் கூறிவந்தனர். பிரபல நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ஹீராவை பற்றி பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஹீராவின் மார்க்கெட் குறைய முழுக்க முழுக்க காரணம் காதல் கிசுகிசுக்கள் தானாம். நடிகர் சரத்குமார், மற்றும் அஜித்குமாரோடு பல காலங்களாக காதலில் இருந்தும் வந்துள்ளர். ஹீரா இதுபற்றி எந்தவொரு அறிவிப்பும் மறுப்பும் இல்லாமல் இருந்து வந்தார். அது ஒன்றே அவரின் மார்க்கெட் இல்லாமல் போக காரணம்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்