கெஸ்ட் ஹவுசுக்குவா..நிர்வாணமாக்கி டார்ச்சர்!! 2024ல் கேரளாவை அதிரவைத்த ஹேமா கமிஷன் அறிக்கை..
ஹேமா கமிட்டி
மலையாள சினிமாவில் கடந்த ஆண்டு பெரியளவில் பேசப்பட்ட விஷயம் என்றால் அது 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிட்டி மூலம் வெளியான பாலியல் அறிக்கை பற்றி தான். அந்தளவிற்கு மிகப்பெரிய பிரளயத்தை உருவாக்கியது ஹேமா கமிட்டி. அதன்பின் நடிகைகள் பலர் தனக்கு நடந்த பாலியல் குற்றங்கள் குறித்து ஓப்பனாக பேசினார்.
நடிகைகளின் புகார்கள்
அப்படி நடிகை ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகர் சங்க பொதுச்செயலாளர் சித்திக் மீது பாலியல் புகாரளித்ததாக கூறியதால் பதவியில் இருந்து விலகினார். அதேபோல் பிரபல குணச்சித்திர நடிகர் திலகனின் மகள் என் தந்தை இறந்தபோது ஒரு பெரிய நடிகர், என்னை கெஸ்ட் ஹவுசுக்கு வா நான் உன்னை பெரிய நடிகை ஆக்குகிறேன் என்று பேசியதாக குற்றம் சாட்டினார்..
இதனை தொடர்ந்து கேரள திரைப்பட அகாடமியின் தலைவர் இயக்குநர் ரஞ்சித் மீது வங்காள நடிகையான ஸ்ரீலேகா மித்ரா, சில ஆண்டுகளுக்கு முன் ஒரு படத்தில் நடிக்க வைப்பதாக கூறி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதனால் அன்று இரவே கொல்கத்தா திரும்பியதாகவும் அந்த நடிகை புகாரளித்ததில் பதவியை ராஜினாமாசெய்தார் ரஞ்சித்.
மேலும் கோழிக்கோட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் 2012ல் மம்முட்டி நடித்த பவுட்டியுடே நாமத்தில் படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குநர் ரஞ்சித்தை சந்தித்து அவரிடம் நடிக்க வாய்ப்புகேட்டேன். அப்போது பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு என்னை அழைத்து எனக்கு மது கொடுத்து என் ஆடைகளை களையவைத்து என்னை நிர்வாணமாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று கூறினார்.
இப்படி தொடர்ந்து நடிகைகளிடம் இருந்து வந்த புகார்களால் மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் பதவியை ராஜினாமா செய்தார்.