ரஜினியின் ராசியான நடிகையை வளைத்து போட்ட கமல்! போட்டியில் அப்படியொரு வெற்றியாம்..
தமிழ் சினிமாவின் இரு துருவ நட்சத்திரங்களாக கருதப்படுபவர்கல் ரஜினி - கமல். இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகினாலும் 80களில் பெரியளவில் பேசப்பட்டு போட்டி போடப்பட்ட நடிகர்களாக இருந்தார்கள். ஆனால் கமல் படங்களில் அதிகமாக வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார் ரஜினி.
அதன்பின் இருவருடன் நடிக்க பல நடிகைகள் போட்டிபோட்டு வந்தனர். அப்படி இருவரும் ஏங்கி தவித்த நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. ரஜினிகாந்த் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் பைரவி. அப்படத்தில் முதலில் ஸ்ரீபிரியா நடிக்கவுள்ளார் என்றதும், என்னுடன் அவர் நடிப்பாரா என்று சந்தேகத்துடன் கேள்வி கேட்டாராம் ரஜினிகாந்த்.
இறுதியில் அவருடன் நடித்த பைரவி படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதன்பின் ஸ்ரீபிரியா தான் தனக்கு செட்டான ஜோடி என்று அவரையே அடுத்தடுத்த படங்களில் கமிட் செய்து வந்தார். பின்னர் ரஜினியின் ராசியான நடிகையாகவும் மாறி ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.
இதை கண்ட கமல்ஹாசன் அவர் படத்தில் மட்டும்தான் ஸ்ரீபிரியா நடிப்பாரா? நான் தானே சீனியர் என்று கூறி இயக்குனர்களிடன் ஸ்ரீபிரியாவை கமிட் செய்து வந்தார்.
அவருடனும் நடிக்க ஆரம்பித்த படங்கள் எல்லாம் வெற்றியை கொடுத்தது. இருவரையும் நடிகை ஸ்ரீபிரியா வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திருந்தார். அப்போது அவரின் மார்க்கெட் அதிகரிக்க அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வந்தார்.