அந்த நடிகை தான் வேண்டும்னு வச்சு செய்த கமல்.. இரண்டு படத்தோடு ஆளே காணாமல் போன நடிகை வசுந்தரா..
சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கும் நடிகைகள் பலர் இரண்டு, மூன்று படங்களில் நடித்து காணாமல் போய்விடுவார்கள். அப்படி பல நடிகைகள் முகத்தோற்றம், நடிப்பு திறனை காட்டி மனதில் ஆழமாக பதிவிடுவார்கள். ஆனால் சில காரணங்களால் அந்த நடிகைகளுக்கு பட வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டே ஓதுங்கிவிடுவார்கள். அந்தவகையில் உலகநாயகன் கமல் ஹாசன் படத்தில் நடித்த ஒரு நடிகை தான் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயுள்ளார்.
தன் படங்களில் ஒரு ஹீரோயினுடன் நடிக்க புது முகங்கள், மற்ற மொழி நடிகைகளுக்கு கமல் ஹாசன் பெரும்பாலும் வாய்ப்பு கொடுப்பது வழக்கம். அப்படித்தான் பின்னணி பாடகியாக வேண்டும் என்ற ஆசையில் வந்து பின் ஹீரோயினாக நடித்தவர் தான் நடிகை வசுந்தரா தாஸ். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி பாடலை பாடி சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார் வசுந்தரா தாஸ்.
அதன்பின் கமலுடன் ஹேராம் படத்தில் இந்த நடிகை தான் நடிக்க வேண்டும் என்று கமல் ஆசைப்பட்டுள்ளார். பின்னணி பாடகியாக இருந்தவரை ஹீரோயினாக்கி அழகு பார்த்தார் கமல். இதன்பின் வசுந்தரா தாஸ், நடிகர் அஜித்குமாரின் சிட்டிசன் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த்ஃஅ இரு படங்களை தொடர்ந்து ஹிந்தி, மலையாள மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து ஒருசில படத்தில் மட்டும் நடித்தார்.
இதனை தொடர்ந்து நடிப்பிற்கு முட்டுக்கட்டை போட்டு பின்னணி பாடகியாக மட்டும் உலாவந்தார். அவர் பாடிய பல பாடல்கள் இன்றுவரை ஹிட்டாகி அனைவரையும் ரசிக்க வைக்கும் வண்ணம் இருக்கும். பின்னணி பாடகியாக 2012 ஆம் ஆண்டு வரை இருந்து பின் திருமணம் செய்து சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார்.
You May Like This Video