வேதாளம் பட காட்சியை காபி அடித்த ஹிந்தி படம்! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
Ajith Kumar
Bollywood
By Parthiban.A
நடிகர் அஜித்தின் வேதாளம் படத்தில் வரும் ஒரு காட்சியை அப்பட்டமாக அப்படியே காபி அடித்து ஒரு ஹிந்தி படத்தில் வைத்து இருக்கின்றனர். அந்த காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆன நிலையில் நெட்டிசன்கள் பாலிவுட்டை கலாய்த்து வருகின்றனர்.
சமீபத்தில் விஜய் பீஸ்ட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் ஜெட் ஓட்டிய காட்சியை பாலிவுட் ரசிகர்கள் மிக மோசமாக கலாய்த்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேதாளம் படத்தில் அஜித் தங்கை முன்னிலையில் வில்லன்களை மிரட்டும் வகையில் முகபாவனை செய்வார், ஆனால் தங்கையிடம் மட்டும் பயந்தது போல காட்டிக்கொள்வார். அதை அப்படியே டைகர் ஷ்ராப் நடித்த Heropanti 2 படத்தில் வைத்து இருக்கின்றனர்.
அதை தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். வீடியோ இதோ..
Adeiiiii ??? ? pic.twitter.com/j91lTW0llg
— Shyam (@Sham_Rahmaniac) May 27, 2022