சம்பளத்தில் இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டிய நடிகர் ரன்வீர் சிங்...

Bollywood Ranveer Singh
By Yathrika Jun 22, 2026 06:30 PM GMT
Report

ரன்வீர் சிங்

பாலிவுட் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் சூபபர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் தான் துரந்தர். 

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் முதன்மை இந்திய உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் ஆர்.மாதவன், சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ராம்பால் என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

சம்பளத்தில் இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டிய நடிகர் ரன்வீர் சிங்... | Highest Paid Actor In India Ranveer Singh

முதல் பாக வெற்றியை தொடர்ந்து 2ம் பாகமும் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கியது, பாக்ஸ் ஆபிஸே திணறியது என்று கூறலாம். இந்த படங்களுக்காக ரன்வீர் சிங் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தான் இப்போது வைரலாகி வருகிறது.

துரந்தர் திரைப்படத்திற்கு லாபத்தில் பங்குபெறும் வகையில் சம்பளம் பேசப்பட்ட நிலையில் துரந்தர் படத்தின் 2 பாகங்களும் ரூ. 3200 கோடிக்கு வசூலானதால் அதில் ரூ. 325 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார் ரன்வீர் சிங்.

இதன்மூலம் நடிகர்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரின் சம்பள சாதனைகளை ரன்வீர் சிங் முறியடித்துள்ளார்.