தொலைக்காட்சியில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்குவது யார் தெரியுமா.. அடேங்கப்பா இத்தனை கோடியா
தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சினிமா நட்சத்திரங்களில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கமல் ஹாசன், சல்மான் கான், அமிதாப் பச்சன் என பல உச்ச நட்சத்திரங்கள் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். இதில் இதுவரை அதிக சம்பளம் வாங்கி வரும் இடத்தில் சல்மான் கான்தான் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.
ஆனால், தற்போது அந்த இடத்தை அமிதாப் பச்சன் பிடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உலக புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கோன் பனேகா க்ரோர்பதி. இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் 17வது சீசன் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி முதல் துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அமிதாப்பச்சன் ஒரு எபிசோடுக்கு ஐந்து கோடி ரூபாய் வாங்குகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் மூலம் வாரத்திற்கு ரூ. 25 கோடி அவர் சம்பாதிக்கப் போகிறார் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சல்மான் கானை பின்னுக்குத் தள்ளி டிவியில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் என்கிற பெயரை அமிதாப்பச்சன் தற்போது பெற்றிருக்கிறார்.