சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 14 லட்சம் சம்பளம்.. அந்த நடிகை யார் தெரியுமா

Serials Bollywood
By Kathick Jun 09, 2025 03:30 AM GMT
Report

சீரியல்களில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 14 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆம், இந்திய சின்னத்திரை வரலாற்றில், சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 14 லட்சம் சம்பளம் வாங்கியது இவர் ஒருவர் மட்டுமே என்கின்றனர்.

சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 14 லட்சம் சம்பளம்.. அந்த நடிகை யார் தெரியுமா | Highest Paid Serial Actress In Indian Television

அவர் வேறுயாரும் இல்லை தற்போது அரசியலில் கலக்கிக்கொண்டிருக்கும் ஸ்மிருதி இரானிதான். நடிகை, அரசியல்வாதி, சின்னத்திரை தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் ஸ்மிருதி இரானி.

இவர் முதல் முறையாக கியூங்கி சாஸ் பி கபி பஹுதி என்கிற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ரூ. 8 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்துள்ளார். பின் அந்த சீரியல் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், ஒரு நாளைக்கு ரூ. 50 ஆயிரம் சம்பளம் வாங்கினாராம்.

சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 14 லட்சம் சம்பளம்.. அந்த நடிகை யார் தெரியுமா | Highest Paid Serial Actress In Indian Television

அதன்பின், கியூங்கி சாஸ் பி கபி பஹுதி சீரியலின் புதிய சீசனில் நடிப்பதற்காக, நடிகை ஸ்மிருதி இரானி ஒரு நாளைக்கு ரூ. 14 லட்சம் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் இந்திய சின்னத்திரை வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்கிற சாதனையை ஸ்மிருதி இரானி படைத்துள்ளார்