அம்மாவான பாலிவுட் பிரபல நடிகை கத்ரீனா கைப்.. குஷியில் கணவர் விக்கி!
Bollywood
Katrina Kaif
Actress
By Bhavya
கத்ரீனா கைப் - விக்கி
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கத்ரீனா கைப்.
சினிமாவில் பிஸியாக நடித்து வந்தவர் கடந்த 2021ம் ஆண்டு நடிகர் விக்கி கவுஷலை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் படங்களில் அவ்வளவாக தலைக்காட்டாமல் இருந்தார்.
ஆனால் தனியார் நிகழ்ச்சிகள், பட விழாக்கள் என தனது கணவருடன் சேர்ந்து கலந்துகொண்டு வருகிறார்.

மகிழ்ச்சியான செய்தி!
இவர் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், தற்போது கத்ரீனா கைப் மற்றும் விக்கி ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இது தொடர்பாக இந்த ஜோடி அவர்களது இன்ஸ்டா பக்கம் மூலம் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என அனைவரும் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.