மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல சீரியல் நடிகை.. ஷாக்கிங் தகவல்

Tamil TV Serials
By Yathrika Jun 28, 2024 08:30 AM GMT
Yathrika

Yathrika

Report

ஹினா கான்

பாலிவுட் சினிமாவில் வலம் வரும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் ஹினா கான். Yeh Rishta Kya Kehlata Hai என்ற ஒரே தொடரில் முக்கிய நாயகியாக நடித்து ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். 

அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறியவர் தொடர்ந்து சீரியல்கள், படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என பிஸியாகவே இருந்தார். 

இடையில் நிறைய போட்டோ ஷுட் நடத்துவது, ஆன்மீக பயணம் என அதிகம் செய்து வந்தார். 

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாவில் தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்க அனைவரும் ஷாக் ஆகியுள்ளனர். அதோடு நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பதிவு செய்து வருகிறார்கள்.